Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப் விற்ற வழக்கில் மேலும் 2 பேர் கைது

புதுச்சேரி, செப். 1: புதுவை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரி அருகே கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப் விற்ற சேலம் பகுதியை சேர்ந்த கீர்த்திவாசனை (22) கோரிமேடு போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசாரிடம் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கோரிமேடு அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்த கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஹைதர் (30), தலச்சேரியை சேர்ந்த முகமது பசல் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 260 கிராம் கஞ்சா, 180 கிராம் ஹாஷிஷ் எண்ணெய் (கஞ்சா எண்ணெய்) மற்றும் 1616 எல்எஸ்டி (லைசரஜிக் அமிலம் டைதிலாமைடு) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதை ஸ்டாம்ப் விற்பனையில், மேலும் பல பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோரிமேடு மற்றும் வடக்கு கிரைம் போலீசார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர். அப்போது பெங்களூரில் ஜவுளி வியாபாரம் செய்து கொண்டு, புதுச்சேரிக்கு போதை ஸ்டாம்ப் சப்ளை செய்து வந்த கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முகமது அஜ்மல் (26), வயநாட்டை சேர்ந்த முகமது தாகீர் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து கிரைம் போலீசார் அவர்களை பெங்களூரில் கைது செய்தனர். பின்னர் அவர்களை புதுச்சேரிக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியை கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.