Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு ஆற்று பகுதிகளுக்கு மக்கள்; குளிக்க செல்ல வேண்டாம்: மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

திருவாரூர், ஜூலை 31: திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,மேட்டூர் அணைக்கு நீர் வரத்தானது அதிகரித்து அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதையடுத்து கடந்த 28ம் தேதி அணை திறக்கப்பட்டுள்ளது. கல்லணை இன்று (31ம் தேதி) திறக்கப்படுகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஆறுகளிலும் அதிகளவில் தண்ணீர் செல்வதற்கு வாய்ப்புள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் நகர்புறம், கிராமபுறப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் சிறுவர், சிறுமியர் மற்றும் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட அனைவரும் ஆற்று பகுதிகளுக்கு குளிக்கச் செல்ல வேண்டாம். இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் நீர் நிலைகளில் சரியான இடங்களில் எச்சரிக்கை பலகைகளையும், தடுப்புகளையும் வைத்திடவேண்டும்.

‘நீர் நிலைப் பகுதிகளுக்கு அருகில் உள்ள மக்களுக்கு ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தும், பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் விளம்பரப்படுத்தி தெரிவிக்க வேண்டும்.நீர்நிலைகள் முன்பாக செல்பி எடுப்பது மற்றும் ஆடு, மாடுகளை நீரில் அழைத்து செல்வது கூடாது. ஆறுகள், குளங்களில் குளிக்க செல்வோர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அளிக்கக்கூடிய முதலுவதவி அளிப்பது குறித்த பயிற்சிகள் பற்றி எடுத்துரைக்க வேண்டும். பொதுமக்கள் நீர்நிலைகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து விளக்கி சொல்ல வேண்டும். வனஅலுவலர்கள், காவல்துறையினர் நீர்நிலைகளில் குளிக்கசெல்வோர் அசாதாரன செயல்களில் ஈடுபடுவதை கண்காணித்திடவும், அவ்வாறு ஈடுபடுவதை தவிர்க்கும் படி அறிவுரை வழங்க வேண்டும். எதிர்பாராத விதமாக ஏற்படும் அசம்பாவிதங்களின் போது முதல் உதவி அளித்திட தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் தயார் நிலையில் வைத்திடவேண்டும். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.