Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

பொன்னேரி, ஜூன் 5: மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வல்லூர் ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில் வல்லூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி பிறந்த நாள் கேக் வெட்டி கலைஞரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு கலைஞரின் சிறிய சிலைகள் கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்பட்டது.

இதேபோல், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல், துணைத் தலைவர் கதிர்வேல் ஏற்பாட்டில் ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் ரமேஷ் ராஜ், 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்த குஷிசிங் என்ற மாணவிக்கு ₹20 ஆயிரமும், 2ம் இடம் பிடித்த மாணவி மதுமிதாவுக்கு ₹10 ஆயிரமும், 3ம் இடம் பிடித்த மாணவன் நிரஞ்சனுக்கு ₹5 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கினார். சிறப்பாக பணிபுரிந்த அத்திப்பட்டு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பின்னர் மூத்த கட்சி நிர்வாகிகளுக்கு பொற்கிழியும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களூக்கு தலா 10 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி கேக் வெட்டி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.

மேலும், தடப்பெரும்பாக்கம், வாயலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில், 12 ஊராட்சிகளில் கலைஞரின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு திமுக கொடி ஏற்றி பின் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் பகலவன், பாஸ்கர் சுந்தரம், உமா மகேஸ்வரி, கதிரவன், சுப்பிரமணி, அன்புவாணன், ருக்மணி மோகன்ராஜ், ராஜா, தமிழரசன், காட்டுப்பள்ளி சேதுராமன், நந்தியம் கலாவதி, செம்மொழி தாஸ், பாளையம், மோகனசுந்தரம், செல்வமணி, தசரதன், ராமமூர்த்தி, மணிமாறன், மோகன், சாமுவேல், மதன்குமார், வழக்கறிஞர் நித்திய குமார், சிற்றரசு, இளைஞர் அணி தமிழரசன், பாலச்சந்தர், கோபால், பிரபாகரன், கன்னிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.