திருச்சி, டிச.3: திருச்சியில் பைக் திருடிய வழக்கில், 2 பேர் கைது செய்யப்பட்டனா். திருச்சி கல்லுக்குழி ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ருக்மங்காதன்(43). இவர், தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நவ.19ம் தேதி, தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் எழுந்து பார்த்தபோது பைக் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து பைக் திருடிய திருவெறும்பூர் வடக்கு காட்டூர் காலனி தெருவை சேர்ந்த ஹரிஹரன்(23), அதே பகுதியை சேர்ந்த புத்தின்ராஜ்(23) ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
+
Advertisement