Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலந்தாய்வில் அதிக மாணவர்கள் தேர்ந்தெடுத்த ரோகிணி இன்ஜினியரிங் கல்லூரி

அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் ரோகிணி இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி உள்ளது. சர்வதேச அளவிலான கல்வியை வழங்குவதற்காக சரோஜா கல்விக்குழுமத்தின் தலைவரான நீலமார்த்தாண்டன் இந்த கல்லூரியை தொடங்கினார். மேலும் இக்கல்லூரி துணை தலைவர் டாக்டர் என் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் டாக்டர் பிளெஸ்சி ஜியோ ஆகியோரின் சீரிய முயற்சியாலும், முதல்வர் டாக்டர் ஆர்.ராஜேஷ் வழிகாட்டுதலோடும் திறம்பட செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி இக்கல்வியாண்டில் NAAC-ல் A+ அங்கீகாரம் பெற்றுள்ளது. இதன் மூலம் ரோகிணி பொறியியல் கல்லூரி குமரி மாவட்டத்தில் A+ அங்கீகாரம் பெற்ற ஒரே கல்லூரி என்ற பெருமையை பெற்றுள்ளது. ரோகிணி பொறியியல் கல்லூரி அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் குமரி மாவட்டத்தில் அதிக மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி என்ற பெருமையைத் தொடர்ந்து 7 ஆண்டுகளாக தக்க வைத்துள்ளது.

இங்கு அதிநவீன ஆய்வுக்கூடங்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நவீன மைய நூலகம், 5 துறை நூலகங்கள், வை-பை வசதி, அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், கிராண்ட் அரோணா எனப்படும் 500 இருக்கை வசதி கொண்ட ஏ.சி.ஆடிட்டோரியம் என பல சிறப்பம்சங்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. என்.எஸ்.எஸ்., ஓய்.ஆர்.சி ரெட்ரிப்பன் கிளப், அரிமா சங்கம் போன்ற சமூக அக்கறை கொண்ட இயக்கங்களிலும் கல்லூரி மாணவர்கள் சிறப்பான பங்களிப்பினை அளித்து வருகின்றனர். கல்லூரி மாணவர்களின் படிப்புத்திறன் மட்டுமின்றி அவர்களின் படைப்பாற்றல், விளையாட்டுத்திறன் மற்றும் அவர்களின் கலைத்திறனையும் வெளிப்படுத்திட களம் அமைந்துள்ளது. இதன்மூலம் 280-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்னணி கல்லூரிகளில் நடைபெற்ற தொழில் நுட்பப்போட்டிகள், கருத்தரங்கங்கள், கலை போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தி கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

160-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுள்ளனர். இதுபோல மாணவர்கள் மாநில அளவில் நடத்தப்பட்ட கலைப்போட்டிகளில் வெற்றிபெற்று பல ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்களின் கலை மற்றும் படைப்பாற்றல் திறமைகளை வெளிக்கொண்டு வருவதிலும் கல்லூரி மிகச்சிறந்த பங்களிப்பினை அளிக்கின்றது.