கிருஷ்ணகிரி, ஜூலை 23: கிருஷ்ணகிரி தாலுகா காவல்நிலைய எஸ்ஐ திருமால் மற்றும் போலீசார், கிருஷ்ணகிரி- ராயக்கோட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நின்ற சரக்கு வாகனத்தில் சோதனை செய்தனர். அதில், வேலி கற்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தின் உரிமையாளர், டிரைவர் குறித்தும் வேலி கற்களை எங்கு எடுத்து செல்ல முயன்றனர் எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


