கரூர், நவ. 8: கரூர் மாவட்டம் சணப்பிரட்டி பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியை முறையாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டம் சணப்பிரட்டி பகுதியில்நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த தொட்டி வளாகத்தை சரியாக பராமரிக்காத காரணத்தினால், இதனை சுற்றிலும் அதிகளவு முட்செடிகள் வளர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து தரப்பினர்களும் அவதிப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த தொட்டி வளாகத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
+
Advertisement