பரமக்குடி, ஜூலை 3: பரமக்குடி அருகே காட்டுபரமக்குடியில் தாழை மதலை கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்று சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் புனிதநீர் கொண்டு வந்து கும்பத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
+
Advertisement


