Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கனகப்பபுரத்தில் ₹15 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி தளவாய் சுந்தரம் எம்எல்ஏ திறந்து வைத்தார்

அஞ்சுகிராமம், ஜூலை 6 : அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட கனகப்பபுரத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி இடிந்து விழும் அபாய நிலையில் காணப்பட்டது. இது குறித்து அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம், அஞ்சுகிராமம் பேரூராட்சி கவுன்சிலர் ராஜபாண்டியன் ஆகியோர் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு புதிய அங்கன்வாடி கட்டி தர வேண்டி தளவாய் சுந்தரம் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். அதனைத் தொடர்ந்து பணிகள் நிறைவடைந்ததையடுத்து திறப்பு விழா நடைபெற்றது. அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ தலைமை வகித்தார்.

வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம், பேரூராட்சி துணைத்தலைவர் காந்திராஜ், மேட்டுக்கால் நீர்ப்பாசன தலைவர் மோகன முத்து தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சுகிராமம் பேரூராட்சி கவுன்சிலர் ராஜபாண்டியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். தொடர்ந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களுடன் கலந்து உரையாடினார். விழாவில் ஒன்றிய அவைத் தலைவர் தம்பித்தங்கம், ஒன்றிய விவசாய அணி செயலாளர் மேட்டுக்குடி முருகன், ஜெ. பேரவை செயலாளர் மணிகண்டன், கவுன்சிலர்கள் ராமச்சந்திரன், காமாட்சி, பேரூர் அதிமுக அவைத் தலைவர் ஜீவா, பேரூர் செயலாளர்கள் மயிலை மனோகரன், அழகை மணிகண்டன், கிளைச் செயலாளர் ஆட்டோ பரமசிவன், கனகை ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அமுதா தாமோதரன் நன்றி கூறினார்.