Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கந்தர்வகோட்டை பகுதிகளில் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிப்பு பணி மும்முரம்

கந்தர்வகோட்டை, ஏப்.11:புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள மக்களின் பிரதான தொழிலான விவசாயம், கால்நாடைகளான ஆடுகள், மாடுகள் வளர்பது தான். விவசாயம் இல்லாத நேரங்களில் மற்ற வேலைக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளனர். கால்நடை வளர்ப்பவர்கள் சம்பா நெல் அறுவடையில் வைக்கோல் வாங்கி கால்நடைகளுக்கு சேகரித்து வைத்திருந்தனர். அது விலை கூடுதலாக இருப்பதால் தற்சமயம் கடலைக் கொடிகள் வாங்கி சேகரித்து வருகிறார்கள்.

கடலை கொடி ஒரு வண்டி ரூ. 6000 எனவும், வாகன செலவு ரூ.2000 கடலை கொடிகளை தோட்டத்தில் ஏற்றி வீடுகளில் இறக்குவதற்கும் அதனை ஏற்றி வர குறைந்தபட்சம் நான்கு ஆட்களுக்கு ரூ.3,600 செலவு ஆகிறது என்று கூறுகிறார்கள். மாட்டுக்கு வைக்கோல், கடலை கொடி விலை கூடுதலாக உள்ளது. மேலும் மாட்டிற்கான தரமான தவுடு கிலோ ஒன்று குறைந்தபட்சம் ரூ.40க்கு விற்பனை ஆகிறது என்று கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவிக்கும் நிலையில் வெயில் காலத்தில் பால் கறவை குறைந்துள்ளது.

தமிழக அரசு ஆவின் பால் கொள்முதல் நிலையத்தை கந்தர்வகோட்டை நகரில் கொண்டுவர வேண்டுமென கேட்டுக்கொள்கிறார்கள். கந்தர்வகோட்டை நகரில் பால் கொள்முதல் நிலையம் அமைத்தால் நகரத்தில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், சுற்றுப்புற கிராமங்களில் வளர்ப்பவர்களுக்கும் சுலபமாக இருக்கும் என தெரிவித்தனர்.