திருச்செங்கோடு, ஆக. 21: திருச்செங்கோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் நேற்று கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. செங்குந்தர் கல்வி குழும தலைவர் ஜான்சன்ஸ் நடராஜன் தலைமை தாங்கினார். செங்குந்தர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளர் பாலதண்டபாணி முகாமை தொடங்கி வைத்தார். பொருளாளர் தனசேகரன் மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின் தொடர்பு இயக்குனர் அரவிந்த் திருநாவுக்கரசு, செங்குந்தர் பொறியியல் கல்லூரி முதல்வர் சதீஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் ஈரோடு தி ஐ பவுண்டேஷன் மெடிக்கல் சூப்பிரண்டன்ட் டாக்டர். விஜய்குமார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கண் பாதுகாப்பு பற்றி பேசினார். 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்துகொண்டனர். இந்நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை இளைஞர் செங்சிலுவை சங்கம், மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் நடத்தினர்.
+
Advertisement


