Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கட்சி, மதத்தை பார்க்காமல் பா.ஜ விற்கு வாக்களியுங்கள் களியக்காவிளையில் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம்

நாகர்கோவில், ஏப்.10: கட்சி, மதத்தை பார்க்காமல் பாஜவிற்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் களியக்காவிளை பகுதியில் இருந்து பிரசாரத்தை நேற்று தொடங்கினார். முன்னதாக களியக்காவிளை சென்ற பொன்.ராதாகிருஷ்ணனை கட்சியினர் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர்.

பிரசாரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: குமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்களை கடத்த கூடாது என்பதற்காக நாம் போராடி வருகிறோம். மலையும் காடுகளும் உங்களுக்கும் எனக்கும் சொந்தம் அல்ல. என் கதை என்னோடு முடிந்து விட்டது. எனக்கு பிள்ளையும் கிடையாது, ஒன்றும் கிடையாது. ஆனால் நீங்கள் உங்கள் குழந்தைகள், அவர்களுடைய பேரக்குழந்தைகள என தலைமுறை தலைமுறையாக இந்த மாவட்டத்தில் உள்ள 20 லட்சம் மக்கள் எந்த சாதியாக இருந்தாலும், மதமாக இருந்தாலும் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு சொந்தமானது இந்த கனிமவளம். அதை சாதாரணமாக கொண்டு சென்று வருகிறார்கள்.

இதற்கு தீர்வு காண வேண்டும். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதும், அமைச்சராக இருந்த போதும் ஒரு நிமிடம் கூட சந்தோஷப்பட்டது கிடையாது. நான் உங்களுக்கு வேலை செய்வதற்காக சபதம் எடுத்து பணியில் இறங்கினேன். கட்சி, மதத்தை பார்க்காமல் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். இந்த தேர்தல் நாம் வாழ வேண்டுமா? வீழ வேண்டுமா? மாவட்டம் செழிக்க வேண்டுமா? அழிய வேண்டுமா? என்பதற்கான தேர்தல் ஆகும். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.