Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கடவூர் அருகே தரகம்பட்டியில் ரூ.12.40 கோடியில் நவீன வசதிகளுடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கடவூர், நவ. 27: கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தரகம்பட்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் அதி நீவன வசதிகளுடன் நிறைவு பெரும் தருவாயில் உள்ளது. தற்போது தரகம்பட்டியில் உள்ள பழைய ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்து புதிய கட்டிடம் அமைக்க இப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான உயர் கல்வித்துறை மானியக்கோரிக்கையின் போது தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன் அடிப்படிப்படையில் ரூ.12.40 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அரசானை வெளியிடப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆலோசனைப்படி புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா கடந்த 14.5.2023 அன்று நடந்தது. இந்த புதிய கட்டிடத்தில் தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாவது தளம் கொண்ட கட்டிடத்தில் 14 வகுப்பறைகள், 2 ஆய்வகம், ஒரு நூலகம், ஒரு கருத்தரங்கக்கூடம் மற்றும் கணினி, சுகாதார மையம், மாணவர்களுக்கான கூட்டுறவு அங்கன்வாடி, முதல்வர் அறை, துறைத்தலைவர்களுக்கான அறைகள், உடற்கல்வி இயக்குநர் அறை, கல்லூரி அலுவலகம், ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் அறைகள், ஒவ்வொரு தளத்திலும் ஆண் மற்றும் பெண்களுக்கான கழிபறைகள் என்று தனித்தனியே அதி நீவன வசதிகளுடன் பிரத்தேகமான முறையில் அமைக்கப்பட்டு உள்ளது.

கீழப்பகுதி ஊராட்சிக்கு உட்பட்ட மைலம்பட்டி கிழக்கு பகுதியில் பாளையம் தோகைமலை மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டு உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான புதிய கட்டிடம் அமைக்கும் பணிகள் கடந்த 18 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் 2 மாதங்களில் முழுமை பெற்று மாணவ மாணவிகளுக்கான பயன்பாட்டிற்கு வர உள்ளது. கடவூர் வட்டாரத்தில் கிராமப்புற மாணவ மாணவியர்கள் பயன் பெறும் நோக்கில் அமைக்கப்பட்டு உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அதி நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் புதிய கட்டிடத்தின் தோற்றங்களை கண்டு பொதுமக்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.