சேலம், பிப்.18: சேலம் தாதகாபட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தானம்(40). இவர் நேற்றுமுன்தினம் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த 3 பேர் கஞ்சா பொட்டலத்துடன் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த அவர், கண்டித்தார். அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து சந்தானத்தை கடுமையாக தாக்கினர். இதுகுறித்து சந்தானம், அன்னதானபட்டி போலீசில் புகார் செய்தார். விசாரித்ததில், அவரை தாக்கியது தாதகாபட்டி தாகூர் தெருவை சேர்ந்த சபரி(எ)சபரிநாதன் (21), டவுன் பகுதியை சேர்ந்த அப்துல் கரீம் (21), மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தான் என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜபடுத்தி, சிறுவனை சிறுவர் இல்லத்திலும், மற்ற 2 பேரை சேலம் சிறையிலும் அடைத்தனர்.
+
Advertisement