தர்மபுரி, நவ.12: தர்மபுரி டவுன் எஸ்ஐ பச்சமுத்து மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரிடம் விசாரித்தனர். அதில், அவர் தர்மபுரி கோட்டை முனியப்பன் கோயில் தெருவை சேர்ந்த அய்யனார் மகன் ராஜகவி (20) என்பதும், விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement


