அரூர், பிப்.24: கோபிநாதம்பட்டி போலீஸ் எஸ்ஐ கமலநாதன் மற்றும் போலீசார், கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள ரேஷன் கடை அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த வாலிபரிடம் விசாரித்தனர். இதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப்(20) என்பதும், கஞ்சா பதுக்கி விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.
+
Advertisement


