Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஓசூர் மாவட்ட பண்ணையில் 60 கால்நடைகள் பொது ஏலம்

ஓசூர், மே 14: ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 60 கால்நடைகள் நாளை (15ம்தேதி) பொது ஏலம் விடப்படும் என மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை, ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 60 கால்நடைகளை, நாளை (15ம்தேதி) காலை 10 மணியளவில் ஏலக் குழுவினர் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள், டேவணித் தொகையாக ரூ.10 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து பெற்று, மாவட்ட கால்நடை பண்ணையில் உள்ள துணை இயக்குநர் அலுவலகத்தில், இன்று (14ம்தேதி) மாலை 5 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். டேவணித் தொகையானது வங்கி வரைவோலையாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

பொது ஏலம் தொடர்பான கூடுதல் விவரங்கள் தேவைப்படின், ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணை துணை இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04344 298832 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். பொது ஏலம் தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விவரங்கள், கால்நடை பராமரிப்புத் துறையின் அனைத்து மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் உதவி இயக்குநர் அலுவலகங்களின் விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டிருக்கும். எனவே, பொதுமக்கள் ஏலத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.