Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஓசூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

ஓசூர், ஜன.13: ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு மேயர் சத்யா தலைமை வகித்தார். விழாவில் துணை மேயர் ஆனந்தய்யா, நிலை குழு தலைவர்கள் மாதேஸ்வரன், சென்னீரப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் போது, பொங்கல் பானை வைத்து வரசித்தி விநாயகர் கோயில் குருக்கள், தேவாலய பாதரியார், மசூதியிலிருந்து மன்சூர் அஹமத் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கலிட்டனர்.

மாநகராட்சி பணியாளர்கள் சீருடை வழங்கி மேயர் சத்யா பேசியதாவது: இந்த பொங்கல் விழா அனைவருக்கும் சிறப்பாக அமையட்டும். பொதுமக்கள் அனைவரும் மாசற்ற மாநகரமாக அமைய ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். பழைய பொருட்களை எரிக்காமல், அனைத்தையும் மாநகராட்சி ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும். தற்போது பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களிலும் பல தொலைநோக்கு திட்டங்கள் ஓசூர் நகரில் அமைய உள்ளது. உலக அரங்கில் வளர்ந்து வரும் நகரங்களில், ஓசூர் நகரமும் ஒன்றாகும். எனவே பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு மேயர் சத்தயா பேசினார். நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ரவி, காந்திமதி கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் வெங்கடேஷ், மஞ்சுளா முனிராஜ், லட்சுமி, சீனிவாசலு, மோசன்தாஜ் நிசார், நாகராஜ், பாக்கியலட்சுமி, ஆஞ்சி, மல்லிகா உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.