சேலம், ஜூலை 20: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதிய குழுவை அமைக்க வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மத்திய அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில், ஈரடுக்கு பேருந்து நிலையம் அருகேயுள்ள தலைமை தபால் நிலையம், பிஎஸ்என்எல் அலுவலகம், காந்திரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் ஆகியவற்றின் முன் ஒன்றிய அரசு ஊழியர்கள், கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். வருமான வரித்துறை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கந்தபாலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிபி நாராயணன், பொருளாளர் ஜீவரத்தினம் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில், ஊழியர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
+
Advertisement