கிருஷ்ணகிரி, ஜூன் 12: கிருஷ்ணகிரி அடுத்த ஜெகதேவி கிராம நிர்வாக அலுவலர் தீபா மற்றும் வருவாய்த்துறையினர் கிருஷ்ணகிரி திருவண்ணா மலை சாலை, ஜிட்டோபனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் கேட்பாரற்று நின்ற டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் 2 யூனிட் கற்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் பர்கூர் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் ராயக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீஸ் மற்றும் அதிகாரிகள், ஓசூர்-ராயக்கோட்டை சாலையில், தக்காளி மார்க்கெட் அருகே ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் கேட்பாரற்று நின்ற டிப்பர் லாரியில் சோதனை செய்தனர். அதில் 1.6 யூனிட் எம்.சாண்ட் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து ராயக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement