Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

எசனை காட்டு மாரியம்மன் கோவில் தேரோட்டம்

பெரம்பலூர்,மே14: எசனை காட்டு மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பெரம்பலூர் அருகே உள்ள எசனை காட்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை பூச்சொரிதலுடன் தொடங்கியது. மே மாதம் நான்காம் தேதி ஞாயிற்றுக் கிழமை காப்பு கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று தேதிகள் வரை ஒவ்வொரு நாளும் மாலையில் அன்ன வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.

12ஆம் தேதி திங்கட்கிழமை அலகு குத்துதல், அக்னி சட்டி ஏந்துதல் மற்றும் பொங்கல் மாவிளக்கு பூஜைகள் நடை பெற்றன. இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் நேர்த்திக் கடன்களுக்காக கைகளில் அக்னிச்சட்டிகளை எடுத்து வந்து அம்மனை பக்தியுடன் வழிபட்டனர். 20க் கும் மேற்பட்டோர் கண்ணங்களில், இடுப்புகளில், முதுகுகளில் அலகு குத்திவந்தனர். பறவைக் காவடி எடுத்து வந்த 4 பேர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காவடி எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று (13ஆம் தேதி) செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் கிராமத்தின் மையப் பகுதியான, ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே இருந்து திருத்தேரோட்டம் தொடங்கியது. நடுப் பிள்ளையார் கோவில் தெரு பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, கீழக்கரை நடுவீதி போஸ்ட் ஆபீஸ் தெரு மற்றும் கடைவீதி வழியாக மதியத்திற்கு பிறகு நிலைக்கு வந்தடைந்தது.

இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் எசனை, கீழக்கரை கிராம பொதுமக்கள் மட்டுமின்றி பெரம்பலூர், ஆலம்பாடி, கோனேரிப் பாளையம், கோமண்டா புதூர், திருப் பெயர், நாவலூர், மேலப் புலியூர், லாடபுரம், அம்மா பாளையம், ஈச்சம்பட்டி களரம்பட்டி, பாளையம், அரும்பாவூர், பூலாம்பாடி, வெங்கலம், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் சேர்ந்த அம்மன் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் ன்று மஞ்சள் நீர் தெளித்தலுக்குப் பிறகு, காப்பு அறுக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.