Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஊட்டியில் தரமற்ற உணவு பொருள் விற்பனை அமோகம்

ஊட்டி, மே 20: ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவு, குடிநீர் வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் ஆகும். இந்த சமயத்தில் ஊட்டியில் நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை புரிவார்கள். சுற்றுலா பயணிகள் வருகையை தொடர்ந்து ஊட்டி நகரில் உள்ள ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து விடும். அதிக கட்டணம் வசூலிப்பதில் அக்கறை கட்டும் ஓட்டல்கள், தரமான உணவுகள், குடிநீர் போன்றவற்றை வழங்குவதில்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இதனால் கோடை சீசனின் போது உணவு பாதுகாப்புத்துறையினர் ஓட்டல்கள், உணவகங்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு தரமற்ற உணவு பொருட்கள், குடிநீர், காலாவதியான குளிர்பானங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்வது வாடிக்கை. தற்போது ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப ஊட்டியில் உணவு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. நகாில் உள்ள பல ஓட்டல்கள், உணவகங்களில் தரமற்ற உணவுகள், குடிநீர் வழங்கப்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் பாிமாறப்படுவதாகவும், குறிப்பாக பல நாட்களுக்கு முன்பு வாங்கப்பட்ட இைறச்சிகளை குளிர்பதன பெட்டியில் வைத்து தேவைக்கேற்ப எடுத்து பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு தரமான மற்றும் சுகாதாரமான உணவுகள், குடிநீர் போன்றவைகள் வழங்கப்படுகிறதா என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எவ்வித ஆய்வு பணிகளையும் இதுவரை துவங்கவில்ைல. எனவே உரிய ஆய்வுகள் மேற்கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு தரமான உணவுகள், குடிநீர் கிடைப்பதை உணவு பாதுகாப்புத்துறை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.