திருப்பூர், அக். 4: தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மஞ்சப்பை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், திருப்பூர் வடக்கு உழவர் சந்தையில் பொதுமக்களுக்கு மஞ்சப்பையை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் வழங்கினார். இதில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் மற்றும் மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், சுகாதாரக்குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பத்மாவதி மற்றும் மாநகர் நல அதிகாரி கவுரி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.