Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உரிய நேரத்தில் தரமான உரம் கிடைக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்பாசனம்

புதுக்கோட்டை,ஜூன் 29: புதுக்கோட்ைட மாவட்டத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் துளி நீரில் அதிக பயிர் - நுண்ணீர்ப் பாசனம் (RKVY), திட்டத்தில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி கூடுதல் பரப்பில் சாகுபடி செய்திடும் பொருட்டு வேளாண் பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர்ப் பாசனம், தெளிப்புநீர்ப் பாசனம் மற்றும் மழைத்தூவான் பாசனக் கருவிகள் சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன. 2024-2025ம் ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 2330 ஹெக்டேர் இலக்கீடு வழங்கப்பட்டு இதுவரை 744 ஹெக்டேர் பரப்பளவில் நுண்ணீர் பாசனக் கருவிகள் அமைக்க பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017-18ம் ஆண்டு முதல் தற்போது வரை தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மைத்துறை மூலம் மொத்தம் 22810 விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

மண் வளம் மேம்பாட்டிற்கு திரவ பொட்டாஷ் பாக்டீரியா உயிர் உரம், மண்ணில் கரையாமல் உள்ள பொட்டாசியத்தை கரைத்து பயிர்களுக்கு கொடுக்கும் பொட்டாஷ் பாக்டீரியா உயிர் உரத்தினை விவசாயிகள் அனைத்து பயிர் சாகுபடியிலும் பயன்படுத்தலாம். பொட்டாஷ் பாக்டீரியா உயிர் உரத்தினை தழைச்சத்தை நிலைநிறுத்தும் அசோஸ்பைரில்லம் அல்லதுரைசோபியம், மணிச்சத்தை கரைத்து கொடுக்கும்பாஸ்போபாக்டீரியா, துத்தநாக சத்தினை எடுத்து கொடுக்கும் துத்தநாக பாக்டீரியா ஆகிய உயிர் உரங்களை திரவடிவத்தில்உள்ள பொட்டாஷ் பாக்டீரியா உயிர் உரத்துடன் சேர்த்துப்பயன்படுத்தலாம். இதனால் மண்ணில் இயற்கையாகக்கிடைக்கும் சாம்பல் சத்தினை பயிர்களுக்குக் கிடைக்கச் செய்துபொட்டாஷ் உரத்திற்கு செலவாகும் தொகையினைகுறைத்திடலாம்.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ளகுடுமியான்மலை உயிர் உர உற்பத்தி மையத்தில் உற்பத்திசெய்யப்பட்டு மாவட்டத்தில் அனைத்து 13 வட்டார வேளாண்மைவிரிவாக்க மையங்களிலும் தேவையான அளவு இருப்புவைக்கப்பட்டு மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின்கீழ் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (மண்வளத்திட்டம்) 2024-2025-இன்கீழ் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பணமில்லா பரிவர்த்தணை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் உள்ள முதன்மை வேளாண்மை விற்பனை கிடங்கில் பணமில்லா பரிவர்த்தணை மேற்கொள்ளும் வகையில் POS இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் இடுபொருட்களை வாங்க செல்லும்பொழுது தாங்கள் செலுத்தும் பங்கு தொகையினை QR Code மூலமாகவோ, UPI அல்லது ATM அட்டை ஆகியவற்றை உபயோகப்படுத்தி இடுபொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.