Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உரிய ஆவணமில்லா ₹59,700 பணம் பறிமுதல்

சிவகங்கை, ஏப். 5: மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளன. ரூ.50 ஆயிரத்துக்கு கூடுதலான பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். சிவகங்கை அருகில் இழந்த குடிப்பட்டியில் தாசில்தார் மைலாவதி தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்புக்கு குழுவினர் வாகனத் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியே வந்த திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே லவுகணம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவரது டூவீலரை சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.59,700 பணத்தை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.