Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உதவி பொறியாளர் பணியிடை நீக்கம்

அம்பத்தூர், ஜூலை 21: முகப்பேர் பகுதியில் ஐஏஎஸ் அதிகாரியின் வீட்டை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மணல், ஜல்லியை வீட்டின் அருகே வைத்திருந்தனர். இவை, போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி அம்பத்தூர் 7வது மண்டலம், 89வது வார்டு உதவி பொறியாளர் தரன் எச்சரித்துள்ளார். மேலும், நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். விசாரணையில், உதவி பொறியாளர் ஸ்ரீதரன் பணம் கேட்டு மிரட்டியது தெரிந்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.