Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உச்சிப்புளி அருகே லாரி மோதி பேக்கரி ஊழியர் பலி

மண்டபம், ஜூலை 10: உச்சிப்புளி அருகே டூவீலர் மீது சரக்கு லாரி மோதியதில் பேக்கரி ஊழியர் பலியானார். சிவகங்கை மாவட்டம் நந்தனூர் மருதங்குடியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயக்குமார்(32). ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்தார். ஜெயக்குமார் சகோதரி மண்டபம் அருகே குஞ்சர்வலசை பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ஜெயக்குமார் சகோதரி வீட்டுக்கு செல்ல உச்சிப்புளியில் இருந்து டூவீலரில் நேற்று மாலை வந்துள்ளார். சாத்தக்கோன்வலசை தில்லை நாச்சி அம்மன் கோயில் குடியிருப்பு பஸ் நிறுத்தம் பகுதியில் வந்தபோது, டூவீலர் மீது மீன் ஏற்றி சென்ற லாரி மோதியது. இதில் ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவர் விருதுநகர், சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சுப்புராஜ்(59) என்பவரை கைது செய்தனர்.