ஈரோடு, அக்.22: ஈரோடு மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுல கிருஷ்ணன் (26). மினி பஸ் டிரைவர். கோகுல கிருஷ்ணன் ஈரோடு பகுதியை சேர்ந்த 18 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அச்சிறுமி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி, கோகுல கிருஷ்ணன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
+
Advertisement


