ஓசூர், ஜூன் 17: ஓசூர் பழைய ஏஎஸ்டிசி அட்கோ பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியில் சோதனை ெசய்தனர். அதில், சுமார் ஒரு டன் எம்.சாண்ட் அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஓசூர் போலீசார் வழக்குப்பதிந்து லாரியை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement


