வந்தவாசி, நவ. 10: வந்தவாசி அருகே இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த டிரைவரை போலீசார் ைகது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7ம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு மடம் கூட்டுச்சாலையில் இருந்து சைக்கிளில் தனது கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த தென்னாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தினேஷ்(30) வேன் டிரைவர் இவர் முன்பாக சைக்கிளில் சென்ற இளம்பெண்ணை கைய பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. அப்போது இளம்பெண் சத்தமிட்டதால் தூரமாக இருந்த பெண் ஒருவர் பதிலுக்கு யார் அவர் என குரல் கொடுத்துள்ளார். இதனால் செய்வது அறியாமல் அங்கிருந்து தினேஷ் தப்பி ஓடினார். சம்பவம் குறித்து இளம்பெண் தேசூர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வேன் டிரைவரை போலீசார் கைது செய்து வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட் செந்தில் குமார் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து வந்தவாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
+
Advertisement