நல்லம்பள்ளி, பிப்.1: நல்லம்பள்ளி அடுத்த பாளையம் சுங்கச்சாவடி வளாகத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டக்குழு தலைவர் ரவி தலைமை வகித்தார். சுங்க சாவடி மேலாளர் நரேஸ் முன்னிலை வகித்தார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து பேசினர். முகாமில், லாரி, பஸ், கார் உள்ளிட்ட வாகன டிரைவர்களுக்கு ரத்த அளவு, சர்க்கரை அளவு, ஈசிஜி மற்றும் கண் பரிசோதனை உள்பட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து, இலவச மருந்து மாத்திரைகளை மருத்துவக்குழுவினர் வழங்கினார். இதில் டிஎஸ்பி ராஜசுந்தர், மோட்டார் வாகன ஆய்வாளர் தரணிதர், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ராஜராஜன், ஹர்ஷாபாபு, இளங்கோவன், சுங்க சாவடி பணியாளர் ஞானசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement