திங்கள்சந்தை, ஜூன் 19: இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன், தலைமை காவலர்கள் சதீஷ்குமார், உதயம் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இரணியல் ஜங்ஷன் அரசு நடுநிலைப் பள்ளி அருகில் சென்றபோது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசு அனுமதியின்றி பீடி, சிகரெட் பாக்கெட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த 36 பீடி, சிகரெட் பாக்கெட்களை பறிமுதல் செய்து கடையிலிருந்த துளசி ராஜன் என்பவரை கைது செய்தனர்.
+
Advertisement


