Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்று ரயில்கள் ரத்து கடற்கரை-எழும்பூர் இடையே சிறப்பு பேருந்துகள் இயக்கம்: எம்டிசி அறிவிப்பு

சென்னை, ஜூலை 14: சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே இன்று ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த வழித்தடத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும், என மாநகர போக்குவரத்து கழகம் தெர்வித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கை:

சென்னை கடற்கரை ரயில் நிலையம் - பூங்கா ரயில் நிலையம் இடையே இன்று (14ம் தேதி) தெற்கு ரயில்வே சார்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.

எனவே, அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம், கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை கட் சர்வீஸ் பேருந்துகளை இன்று இயக்கவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.