விருதுநகர், பிப்.19: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சாக்கடை கலந்த குடிநீருடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஆர்.ஆர்.நகரில் உள்ள வாடியூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தில் வழங்கப்படும் குடிநீர் இணைப்பிற்கு கட்டாய பணம் வசூல் செய்யப்படுகிறது.
மேலும் ஊராட்சியில் தூய்மையான குடிநீர் வழங்க கோரி கோஷம் எழுப்பினர். ஊராட்சியில் வழங்கப்படும் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதாக கூறி, சாக்கடை கலந்த துர்நாற்றம் வீசும் நீரை பாட்டிலில் அடைத்து கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நர்வாகிகள் இளங்கோவன், கல்யாணி, சங்கரன், சந்தோஷம் பிள்ளை, மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.