இடைப்பாடி, பிப்.14: இடைப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக காலை 9 மணி வரை கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஊர்ந்து செல்கின்றன. அதிகாலை விவசாய வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்காக வெளியூர் செல்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குல்லா, சுவெட்டர் அணிந்தபடி வீட்டை விட்டு வெளியே செல்கின்றனர். இடைப்பாடி பகுதியில் இரவில் கடும் குளிரும், அதிகாலை முதல் 10 மணி வரை பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement


