சிவகங்கை, ஜூன் 12: சிவகங்கை கலெக்டர் அலுவலகம் எதிரே சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கருப்பு உடை அணிநத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு ரூ.7850 வழங்கல் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெறும் நாளில் ஒட்டு மொத்த தொகை எஸ்பிஎப், ஜிபிஎப் வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உடையணசாமி தலைமை வகித்தார். நிதிக்காப்பாளர் நடராஜன் வரவேற்றார். மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் முத்தழகு தொடக்கவுரையாற்றினார்.
மாநிலச்செயலாளர் பாண்டி கண்டன உரையாற்றினார். பல்வேறு சங்க நிர்வாகிகள் பாண்டி, மாரி, ராமானுஜம், உதயசங்கர், கோபால், பெரியநாயகி, லதா, மணிமுரசு உள்ளிட்டோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச்செயலர் ராதாகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். மகளிர்குழு நிர்வாகி கனகஜோதி நன்றி கூறினார். இதில் ஏராளமான ஓய்வுதியர்கள் கலந்து கொண்டனர்.


