விருதுநகர், ஜூன் 29: விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தொடக்கல்வித் துறையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், பதவி உயர்வுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு இறுதி தீர்ப்பு வரும் வரை பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவதை நிறுத்தாமல் இருப்பதை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும், பொதுமாறுதல் கலந்தாய்வு அட்டவணையை மாற்றி அமைத்து ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வு நடத்த வேண்டும். சென்னையில் கடந்த அக்.2023ல் அமைச்சர் முன்னிலையில் ஏற்கப்பட்ட 12 கோரிக்கைகளை தொடர்பாக ஆணை பிறப்பிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
+
Advertisement


