மதுரை, கூடல்புதூர் போலீசார், விளாங்குடி காமாட்சியம்மன் கோயில் மந்தை முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர், விளாங்குடி, சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த யுவராஜ் (22) எனவும், வழிப்பறியில் ஈடுபடுவதற்காக வாளுடன் சுற்றியதும் தெரிந்தது.வாளை பறிமுதல் செய்த போலீசார், யுவராஜை கைது செய்தனர். இதேபோல், அண்ணா நகர், குருவிக்காரன் சாலை பகுதியில் இரவு நேரத்தில் வாளுடன் சுற்றிய கீரைத்துறையைச் சேர்ந்த சரவணகுமார் (24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
+
Advertisement


