ஓசூர், ஜூலை 19: சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து, கர்நாடக மாநில தலித் அமைப்புகளின் பீமா கூட்டமைப்பினர், நேற்று தமிழக எல்லையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கூட்டமைப்பின் மாநில தலைவர் ஸ்ரீஹெப்பாலா வெங்கடேஷ், தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்குள் நுழைந்து முற்றுகையிட முயன்றனர். அவர்களை கர்நாடக மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
+
Advertisement