Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.5 லட்சம் மீட்பு

திருவண்ணாமலை, மே 24: ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு இணையதளமான www.cybercrime.gov.in மற்றும் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு புகார் அளித்தனர். அதன்பேரில், திருவண்ணாமலை எஸ்பி சுதாகர் உத்தரவின்படிசைபர் குற்றப்பிரிவு கூடுதல் எஸ்பி பழனி மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து, இழந்த பணத்தை வங்கிகளின் உதவியுடன் மீட்டனர். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இணைய வழியில் பணத்தை இழந்த நபர்களை நேரில் அழைத்து மீட்கப்பட்ட ரூ.5 லட்சத்தை உரியவர்களிடம் எஸ்பி சுதாகர் ஒப்படைத்தார். மேலும், தேவையற்ற லிங்க்குகளை தொடவேண்டாம், வாட்ஸ் அப், டெலிகிராம் மூலம் வரும் போலியான வங்கி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். ஓடிபி யை யாரிடமும் பகிர வேண்டாம் மற்றும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர வேண்டாம் என எஸ் பி கேட்டுக்கொண்டார். சமீப காலமாக ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு, கடன் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வருகின்றன அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்றார்.