Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆத்தூர் மாணவி உள்பட 32 பேரை மீட்க கோரிக்கை

ஆத்தூர், ஜூலை 22: வங்கதேசத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள், உறவினர்களுக்கு அரசு வேலைகளில் வழங்கப்படும் 30 சதவீதம் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வன்முறையாக மாறி உள்ளது. போராட்டத்தால் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த தமாகா மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் சத்யா-சண்முகம் தம்பதியின் மகள் ஜனனிபிரியா(19) என்பவர், டாக்காவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாமாண்டு படித்து வருகிறார். அவருடன், தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 32 பேர், நேற்று காலை வங்கதேசத்திலிருந்து இந்திய எல்லையான கில்லி பகுதிக்கு அழைத்து வரப்பட்டனர். அதே போல், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 180 பேரும் அங்கு வந்திருந்தனர். அவர்கள் உணவு-தண்ணீர் வசதியின்றி பரிதவித்து வருகின்றனர். அவர்களை பாதுகாப்பாக மீட்டு கொண்டுவர மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில், தமிழக அரசின் துரித நடவடிக்கையின் காரணமாக, தமிழக மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, கொல்கத்தாவிற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் வருவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.