திருச்செந்தூர், மே 24: ஆத்தூர், ஏரல் பாலங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத்திடம் தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் காமராசு நாடார் தலைமையில் நிர்வாகிகள் கொடுத்துள்ள மனு: கடந்த 2 வருடங்களுக்கு முன் பெய்த கன மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் தாமிரபரணி ஆற்றின் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தூத்துக்குடி மாவட்டம் மிகப்பெரிய பேரழிவை சந்தித்தது. இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பீடும் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் தாமிரபரணி ஆற்றின் இரண்டு முக்கியமான பாலங்களான ஏரல் மற்றும் ஆத்தூர் பாலங்கள் சேதமடைந்து தற்போது வரை போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மிகுந்த சிரமத்துடன் அந்தப்பகுதியை பழைய பாலங்களில் கடந்து செல்கின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் இரு பாலப்பணிகளையும் தரமாக சீரமைத்து போக்குவரத்து பயன்பாட்டுக்கு வழி செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement


