Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு சிவன் கோயிலில் சட்ட தேரோட்டம்

சிவகாசி, ஜூலை 20: சிவகாசி சிவன் கோயிலில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு சட்ட தேரோட்டம் நடந்தது. சிவகாசியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான சிவன் கோயில் உள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலின் ஆடித் தபசு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா கடந்த 11ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் நடக்கும் திருவிழாவில் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.

தினமும் இரவு சுவாமி, அம்பாளுடன் ரிஷப, காமதேனு, சிம்ம, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருவார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சட்டத் தேரோட்டம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சியும், நாளை மாலை 6 மணிக்கு தெற்கு ரதவீதியில் விஸ்வநாதர், ரிஷப வாகனத்தில் விசாலாட்சி அம்மனுக்கு தபசுக்காட்சி அளிக்கிறார். 25ம் தேதி காலை 10 மணிக்கு உற்சவசாந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆடிதபசு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரேவதி மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.