Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருப்பூர், ஜூலை12: திருப்பூர் ராயபுரம் மற்றும் சின்னான்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது. இதைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் ஆகியோர் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின் பேரில் மாநகராட்சி உதவி நகர திட்டமிடுநரும்,செயற்பொறியாளருமான சுப்புதாய், உதவி பொறியாளர் ஆறுமுகம் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ராயபுரம் மற்றும் சின்னான்நகர் பகுதியில் கடைகள் மற்றும் தள்ளுவண்டிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகள் முழுவீச்சில் அகற்றப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆக்கிரமிப்புகள் குறித்து தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு சம்பவங்கள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என்றனர்.