ஓசூர், நவ.10: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராயக்கோட்டை சாலையில், தனியாருக்கு சொந்தமான வக்கீல் லே-அவுட் குடியிருப்பு பகுதியையொட்டி, அரசுக்கு ெசாந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி, வாடகைக்கு விடுவதாக ஓசூர் சப்கலெக்டர் பிரியங்காவிற்கு தகவல் வந்தது. அதன் பேரில், கடந்த சில நாட்களுக்கு முன், சப்கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, அரசு இடத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதும், அதில் சிலர் வீடுகளை வாடகைக்கு விடுவதற்காக கட்டியிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை இடித்து அகற்றும்படி, வருவாய்த்துறையினருக்கு சப்கலெக்டர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, நேற்று தாசில்தார் சின்னசாமி தலைமையில், வருவாய் துறையினர் மற்றும் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமித்து கட்டிய 15 வீடுகள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டன.
+
Advertisement