சேலம், ஜூலை 9: சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பில், பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் சண்முகசுந்தரம் பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரியின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். முன்னதாக, கல்லூரி சார்பில் நிறுவனரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த மாற்று மருத்துவத்துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் லதா பங்கேற்றார். நிகழ்வில் கல்லூரியை சேர்ந்த சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரத்த தானம் வழங்கினர். இந்த ரத்தம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. குடும்ப சூழ்நிலையில் பின்தங்கி, நன்கு பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு டாக்டர் சண்முகசுந்தரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர் மற்றும் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் கிருத்திகா, அல்போன்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
+
Advertisement