அரியலூர், ஜூன் 11: அரியலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்த நிலையில், மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி குத்துவிளக்கேற்றி சிறப்பு நூலகத்தை பார்வையிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது நூலக இயக்ககம் சார்பில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தினை காணொலிக்காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி குத்து விளக்கேற்றி வைத்து சிறப்பு நூலகத்தினை பார்வையிட்டார்.தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்கா, பொது நூலக இயக்ககம் சார்பில் ரூ.29.80 கோடி மதிப்பீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், முழுநேர கிளை நூலகக் கட்டடம் மற்றும் 70 சிறப்பு நூலகங்களை திறந்து வைத்தார்.
அதன்படி, அரியலூர் மாவட்டம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள், சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளின் உறவினர்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் பொது நூலக இயக்ககம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தினை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி கலந்துகொண்டு சிறப்பு நூலகத்தில் குத்து விளக்கேற்றி வைத்தார். மேலும், இச்சிறப்பு நூலகத்திற்கு பொதுமக்கள் நன்கொடையாக வழங்கிய புத்தகங்களையும் பெற்றுக்கொண்டார். ந்நிகழ்வில், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வரும் மருத்துவருமான முத்துகிருஷ்ணன், மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் கொளஞ்சிநாதன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


