கன்னியாகுமரி, ஏப்.23: கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை பண்ணையில் உள்ள பழத்தோட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் இருந்து மாங்காய் விற்பனை செய்யப்படும். அதேபோல் இந்தாண்டும் மாங்காய் விற்பனை துவங்கி உள்ளது. இதில் முக்கிய ரகங்களான பங்கனப்பள்ளி, பெங்களூரா, பஞ்சவர்ணம், ஹிமாயுதீன், கலப்பாடு, நீலம் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன. இது முற்றிலும் இயற்கையான முறையில் விளைவிக்கப்படுகின்றன. மாங்காய் வாங்க விரும்புவோர் கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்துக்கு வந்து நேரடியாக விலைக்கு வாங்கலாம். இதற்கான ஏற்பாடுகளை அரசு தோட்டக்கலை, பண்ணை தோட்டக்கலை அலுவலர் சக்திவேல், உதவி தோட்டக்கலை அலுவலர் அஜின் ஆகியோர் செய்து வருகின்றனர்.
+
Advertisement


