Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அரசு பள்ளி மாணவிகள் 8 பேர் மருத்துவமனையில் அனுமதி ேபாலீஸ் விசாரணை எலி மருந்து கலந்த மிக்சர் சாப்பிட்டதாக கூறி

ஆரணி, ஆக. 15: எலி மருந்து கலந்த மிக்சர் சாப்பிட்டதாக கூறி அரசு பள்ளி மாணவிகள் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 900க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், 12ம் வகுப்பில் 90க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவிகள் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்து படித்துள்ளனர். பின்னர் மதிய உணவு முடிந்ததும் வகுப்பறைக்கு சென்று படித்துள்ளனர். தொடர்ந்து, மாலை பள்ளி இடைவெளி நேரத்தில் ஒரு மாணவியின் பையில் இருந்த மிக்சரை எடுத்து அந்த மாணவிக்கு தெரியாமல் 8 மாணவிகள் சாப்பிட்டுள்ளனர். பின்னர் அந்த மாணவி வந்து தனது பையை திறந்து பார்த்த போது, மிக்சர் இல்லை. இதனால், தனது தோழிகளிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் நாங்கள் அனைவரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவி எலி மருந்து கலந்து மிக்சரை, எதற்கு நீங்கள் எடுத்து சாப்பிட்டீர்கள் என அவர்களிடம் பதட்டத்துடன் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சகமாணவிகளில் சிலருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே மாணவிகள் வகுப்பறையில் இருந்த ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, ஆசிரியர்கள் அந்த மாணவர்களிடம் விசாரித்தபோது எலி மருந்து கலந்த மிக்சரை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக அந்த 8 மாணவிகளை களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சிகிச்சை பெற்று வரும் மாணவிகள் உண்மையாகவே எலி மருந்து கலந்த மிக்சர்தான் சாப்பிட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். தொடர், விசாரணையில் மிக்சர் வைத்திருந்த மாணவிக்கு கொடுக்காமல், சக மாணவிகள் மிக்சைர சாப்பிட்டதால் தான், அதில், எலி மருந்து கலந்ததாக பொய் சொன்னதாக அந்த மாணவி தெரிவித்தாக போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, அந்த மாணவிகளுக்கு ஆரணி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மிக்ச்சரில் எலி மருந்து கலக்கபட்டதா அல்லது மாணவி பொய் சொன்னாரா என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால், ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.