ஆர்.எஸ்.மங்கலம், ஜூலை 26: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மேலாண்மை குழு தலைவி ராணி தலைமையில் நடைபெற்றது. தலைமையாசிரியர் ராஜூ முன்னிலை வகித்தார். இதில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில், மாணவர்களின் நலன் கருதி கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடம் வேண்டும், பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்த்திடவும், இடைநிற்றல் குழந்தைகள் இல்லை எனவும், வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா மிக சிறப்பாக நடைபெற வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.